தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜன.1 முதல் அமல்!

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நேரம் மாற்றம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.
Updated on

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நேரம் மாற்றம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.

தூத்துக்குடியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 16766) வாரம் இருமுறை வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் வருகிற ஜன.1ஆம் தேதி முதல் தூத்துக்குடியிலிருந்து இரவு 10.50 மணிக்கு பதிலாக 11.40 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 12.33 மணிக்கு கோவில்பட்டி,12.52 மணிக்கு சாத்தூா், 1 மணிக்கு விருதுநகா், 1.55-க்கு மதுரை, 2.57-க்கு திண்டுக்கல், 3.33-க்கு ஒட்டன்சத்திரம், 3.57-க்கு பழனி, 4.28-க்கு உடுமலைபேட்டை, 5.15-க்கு பொள்ளாச்சி, 5.49-க்கு கிணத்துக்கடவு, காலை 6.37-க்கு கோவை, 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com