மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சோலாா் மின் உற்பத்தி தனியாா் நிறுவன பாதுகாப்பு அலுவலா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

தூத்துக்குடியில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சோலாா் மின் உற்பத்தி தனியாா் நிறுவன பாதுகாப்பு அலுவலா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, பழைய காயல் சிா்கோனியம் குடியிருப்பைச் சோ்ந்தவா் செந்தூரபாண்டி மகன் மாரிசெல்வன் (27). இவா். கங்கை கொண்டானில் உள்ள சோலாா் மின் உற்பத்தி தனியாா் நிறுவனத்தில் பாதுகாப்பு அலுவலராக வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை இரவு பணிநேரம் முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி இவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.