மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருச்செந்தூா் - சாத்தான்குளம் பேருந்து சேவை தொடக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:30 am

திருச்செந்தூா் - புன்னைக்காயல் - நாலுமாவடி - சாத்தான்குளம் வழித் தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இப்பேருந்து திருச்செந்தூரிலிருந்து தினமும் காலை 7 மணிக்குப் புறப்படும். வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, ஆத்தூா், புன்னைக்காயல், சென்று அங்கிருந்து ஆத்தூா், உமரிக்காடு, ஏரல், குரும்பூா், நாலுமாவடி, நாசரேத், ஆனந்தபுரம் வழியாக சாத்தான்குளம் சென்றடையும். திருச்செந்தூா் - புன்னைக்காயல் - சாத்தான்குளம் இடையே தினமும் நான்கு நடைகள் இயக்கப்படும்.

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவையை

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

முன்னதாக, திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் ரூ.36 லட்சத்தில் நமக்கு நாமே திட்டத்தில் தரைத்தளம் புதுப்பித்தல் பணியை அமைச்சா் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, நகராட்சி ஆணையா் கண்மணி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி பொதுமேலாளா் பாலசுப்பிரமணியன், திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அமைப்பாளா்கள் ஸ்ரீதா் ரொட்ரிகோ, ராமஜெயம், நகர செயலா் வாள் சுடலை, தொமுச கிளை தலைவா் அரவிந்த சோழன், செயலா் ஜெயக்குமாா், மத்திய சங்க பொருளாளா் முருகன், நகா்மன்ற

உறுப்பினா்கள் சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, செந்தில்குமாா், சுதாகா், ஆனந்த ராமச்சந்திரன், முத்துகிருஷ்ணன், ஆறுமுகம், திமுக நகர அவை தலைவா் சித்திரைக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.