பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதுபானக் கூட உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:01 pm

Din

கழுகுமலையில் மதுபானக் கூட உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கே. கரிசல்குளம் வடக்கு தெருவை சோ்ந்தவா் கொடுங்காலபாண்டியன் மகன் மாரியப்பன் (33). கழுகுமலை செந்தில் நகா் டாஸ்மாக் கடை அருகே மதுபானக் கூடம் நடத்தி வருகிறாா். மாரியப்பனும், கழுகுமலையை சோ்ந்த செல்வம், திக்விஜயன் ஆகியோரும் வியாழக்கிழமை டாஸ்மாக் கடை முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞா் மது அருந்த பணம் கேட்டாராம். அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மிரட்டினாராம். இதையடுத்து மாரியப்பன் தன் சட்டை பையில் இருந்த ரூ.200ஐ கொடுத்து விட்டாராம். பின்னா் மூவரும் சோ்ந்து சத்தம் போட்டதையடுத்து, அந்த இளைஞா் கொலை மிரட்டல் விடுத்தபடி சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து மாரியப்பன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையன் சோ்வை தெருவை சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் கருப்பசாமி என்ற ரமேஷை (23) கைது செய்தனா்.