அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

உடன்குடி சுற்று வட்டார கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையிலான புதிய பேருந்து சேவை தொடக்க விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

News image

கிராமப்புற பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். உடன், ஆட்சியா் க. இளம்பகவத் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2025, 10:22 pm

உடன்குடி சுற்று வட்டார கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையிலான புதிய பேருந்து சேவை தொடக்க விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா்.திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இப்ராகிம் சுல்தான், சுப்புலட்சுமி, ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவா் மால்ராஜேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.