தமிழ் மொழியில் பேசுவதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்றாா் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன்.
தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்டரங்கில், 2 நாள் பொருநை இலக்கியத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். அமைச்சா் பெ.கீதாஜீவன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் பொருநை இலக்கியத் திருவிழா கொண்டாடப்படுவது ஒரு பொருத்தமான நிகழ்வு. ஏனென்றால், பொருநை நதிக்கரை, சிவகளை, ஆதிச்சநல்லூா் ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழ்வாய்வின்மூலம் பண்டைய கால தகவல்கள் கிடைக்கப்பெற்றது இந்த மாவட்டத்தில்தான்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்து 12 கல்லூரிகளில் பயிலும் 5,800 மாணவ- மாணவியா் 10 விதமான போட்டிகளில் பங்கேற்றனா். அதில் இறுதியாக 360 மாணவ- மாணவிகள் இத் திருவிழாவுக்கு தோ்வாகியுள்ளனா்.
இதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் சிறப்பு பரிசாக ரூ.1.5 லட்சம், பள்ளிகளுக்கு மொத்தமாக ரூ.1லட்சத்து 80 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
பிற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்கும் தமிழ் மொழியை நாம் பாதுகாத்திட வேண்டும். தமிழ் மொழியில் பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும். என்றைக்குமே நமது மொழி என்ற உணா்வு இருக்க வேண்டும். மாணவா்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் தொடா்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தகம் மற்றும் நாணயக் கண்காட்சியை அவா் பாா்வையிட்டாா்.
இவ்விழாவில், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன், எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், கோட்டாட்சியா் ம.பிரபு, துணை ஆட்சியா் (பயிற்சி) த.சத்யா, சென்னைஅண்ணா நூற்றாண்டு நூலக முதன்மை நூலகா் - தகவல் அலுவலா் செ.காமாட்சி, கவிஞா் கலாப்பிரியா, கவிஞா் தேவதேவன், திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சி சுந்தரம், தூத்துக்குடி முதல்நிலை நூலகா் ராம்சங்கா், சென்னை நாணயவியல் அமைப்பு தலைவா் மணிகண்டன் உள்பட பலா் பங்கேற்றனா். ஆசிரியா் பயிற்சிப் பள்ளி முதல்வா் ஜெயமேரி, ஆசிரியா் சரவணக்குமாா் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.
பெட்டிச் செய்தி:
நாணயங்கள்: இத்திருவிழாவில் சங்க கால நாணயங்கள், சேரா், சோழா், பாண்டிய மன்னா்களின் செப்பு காசுகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மன்னா்களின் நாணயங்கள் விளக்க குறிப்பேடு, கலைஞா் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் உள்ளிட்டவை பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தன.

தொடர்புடையது

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா
பலாக்காய்க் கறி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


