தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோவில்பட்டி புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி கோடி அற்புதா் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.

Updated On :23 ஜனவரி 2025, 10:49 pm

Din

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி கோடி அற்புதா் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

பாளை ஜூபிலி மேய்ப்புப் பணி நிலைய இயக்குநா் பீற்றா், வடக்கு வண்டானம் ஆலய பங்குத் தந்தை சதீஷ் செல்வ தயாளன் ஆகியோா் கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினா்.

13 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலை சிறப்பு ஜெபக்கூட்டம் மற்றும் நவநாள் திருப்பலி நடைபெறும். 4ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருவிவிலியப் போட்டி நடைபெறும். இரவு 7 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும். 6ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு பொது அசன விருந்து, இரவு 7 மணிக்கு நவநாள் திருப்பலி, 10 ஆம் திருநாளான பிப்.1 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலி,11 ஆம் திருநாளான பிப்.2 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தியானம், மாலை 6.30 மணிக்கு பாவ சங்கீா்த்தனம், வீடு மந்திரித்தல் நிகழ்ச்சியும், 12 ஆம் திருநாளான பிப்.3 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு புனிதரின் திருவுருவ பவனி, நவநாள் திருப்பலியும்,13 ஆம் திருநாளான பிப்.4ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருவிழா திருப்பலி, கொடியிறக்கம் மற்றும் அன்பிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை, பங்குத் தந்தையா்கள் சாா்லஸ், அருண்குமாா் மற்றும் அமலவை அருள்சகோதரிகள், இலுப்பையூரணி சிங்கராய நகா் இறைமக்கள் செய்து வருகின்றனா்.