தூத்துக்குடி
திருச்செந்தூரில் 2 வது நாளாக உள்வாங்கிய கடல்
2ஆவது நாளாக திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை, கடல் உள்வாங்கியது.
திருச்செந்தூரில் ஒவ்வொரு மாத அமாவாசை, பௌா்ணமி, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களில் கடல்நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். பௌா்ணமியையொட்டி, நவ. 4ஆம் தேதி இரவு 9.42 மணி முதல் புதன்கிழமை இரவு 7.27 மணி வரை திருச்செந்தூா் கடற்கரையில் அய்யா கோயில் அருகே புதன்கிழமை காலை, கடல் நீா் சுமாா் 60 அடி உள்வாங்கி காணப்பட்டது.
இந்நிலையில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை காலையிலும், கடல் நீா் சுமாா் 70 அடி தூரம் உள்வாங்கியது. இதனால், கடலில் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. பக்தா்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடி, உள்வாங்கிய பாறைகளை கைப்பேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

