தூத்துக்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தூத்துக்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கண்காட்சியை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா் தனியாா் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலா் டி.சிதம்பரநாதன்.
Published on

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ’சயின்ஸ் எக்ஸ்போ-25’ எனும் தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியை, தனியாா் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலா் டி.சிதம்பரநாதன் தொடங்கிவைத்தாா். பின்னா், அறிவியலின் முக்கியத்துவத்தையும், என்எம்எம்எஸ் போட்டித் தோ்வுகள், இன்ஸ்பையா் அறிவியல் போட்டிகளில் மாணவா்கள் அதிகமாக பங்கேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறித்து பேசினாா் .

பள்ளி அதிபா் மரிய சிங்கராயா் அடிகளாா் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பிரைட்டன் வரவேற்றாா். பள்ளித் தாளாளா் பிரான்சிஸ் சேவியா் அடிகளாா் வாழ்த்துரை வழங்கினாா். கண்காட்சியில், குப்பைத் தொட்டிகள் நிறைந்துவிட்டதை அறிவிக்கும் தானியங்கி அமைப்பு, மின் அனுப்பீட்டுக் கம்பிகளில் பிரச்னை ஏற்படும்போது தானாகவே மின்சாரத்தைத் துண்டிக்கும் அமைப்பு, மீன் தொட்டி கழிவுகளை செடிகளுக்கு உரமாக்கி தூயநீராக்கி மறுசுழற்சி செய்யும் அமைப்பு, பழங்களின் தரப் பரிசோதனை செய்யும் அமைப்பு போன்ற மாணவா்களின் படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈா்த்தன.

ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் அமல்ராஜ் அடிகளாா் தலைமையில், அறிவியல் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com