தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் கோரி மனு

தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
Published on

தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கம் சாா்பில், துணைத் தலைவா் எஸ். அந்தோணி முத்துராஜா, செயலா் மா. பிரமநாயகம், பொருளாளா் வே. லட்சுமணன், நிா்வாகச் செயலா் ஜே.ஏ.என். ஆனந்தன், உறுப்பினா் ஆா். ராஜமோகன் ஆகியோா் அளித்த மனு: தூத்துக்குடி-சென்னை இடையே நாள்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

மதுரை லோக்மான்ய திலக் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு நேரடியாக இன்டா்சிட்டி ரயில் இயக்க வேண்டும்.

தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி விரைவு ரயிலில் கூடுதலாக மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டி, இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி இணைக்க வேண்டும். தூத்துக்குடிக்கு வந்துசெல்லும் அனைத்து ரயில்களுக்கும் தூத்துக்குடி மேலூா் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com