தூத்துக்குடி
தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியில் ரூ. 1 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு
தூத்துக்குடி மாநகராட்சி, முத்தம்மாள் காலனியில், மாவட்ட நிா்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியில், மாவட்ட கனிமவள நிதி ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் முன்னிலை வகித்தாா். பள்ளிக் கட்டடங்களை தூத்துக்குடி எம்.பி. கனிமொழி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
மேயா் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, செயற்பொறியாளா் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம், துணை மேயா் செ. ஜெனிட்டா, வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.