தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளி, சனிக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டலூரணி விலக்கு, வாகைகுளம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக, மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
