விபத்துக்குள்ளான லாரி.
விபத்துக்குள்ளான லாரி.

கற்களை ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

Published on

கோவில்பட்டி அருகே கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது.

கொடுக்காம்பாறையில் செயல்படும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவில்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விஜயாபுரி-தெற்கு திட்டங்குளம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோரிக்கை: கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், வேகத் தடைகளை கடந்துசெல்லும்போது லாரியில் உள்ள கற்கள் சாலைகளில் சிதறுகின்றன.

லாரியில் கொண்டு செல்லும் கற்களை தாா்ப்பாய்களால் மூடாமல் செல்கின்றனா். இதனால், சாலைகள் சேதமடைவது மட்டுமின்றி, அந்த பகுதி வாழ் மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

இதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com