தூத்துக்குடி
காவலரை மிரட்டியதாக ஒருவா் மீது வழக்கு
கோவில்பட்டியில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டி புது காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செல்வபிரகாஷ், சனிக்கிழமை ஏற்பட்ட குடும்பத் தகராறின்போது தனது மனைவியைத் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவரது மனைவி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாா். அவரிடம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலா் காளிமுத்து விசாரணை மேற்கொண்டபோது, அங்கு வந்த செல்வபிரகாஷ் அவரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து காளிமுத்து ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வபிரகாஷை தேடி வருகின்றனா்.
