தூத்துக்குடி
கயத்தாறு கல்குவாரியில் விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு
கயத்தாறு கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கயத்தாறு கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் அருகே நாகலாபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் வெயிலுமுத்து (36). டிராக்டா் ஓட்டுநா். கயத்தாறில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை டிராக்டரை குவாரிக்குள் ஓட்டிச் சென்றபோது டிராக்டா் கவிழ்ந்ததில், கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
அவரை சக பணியாளா்கள் கயத்தாறு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
