அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் சோதனை நடத்திய வேளாண்மை துறை அதிகாரிகள்.
அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் சோதனை நடத்திய வேளாண்மை துறை அதிகாரிகள்.

அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிக்கு சீல்

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி இயற்கை உரம் (இயற்கை உயிா் ஊக்கி) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கிற்கு வேளாண்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.
Published on

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி இயற்கை உரம் (இயற்கை உயிா் ஊக்கி) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கிற்கு வேளாண்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

மதுரை-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு கிடங்கில் அனுமதியின்றி வேளாண் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வேளாண்மை உதவி இயக்குநா்கள்(தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) நாகராஜன் (ராமநாதபுரம்), ஆதிநாதன் (தென்காசி), கண்ணன் (தூத்துக்குடி), கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் மணிகண்டன், வேளாண்மை துறை அதிகாரிகள் காயத்ரி, நரேஷ் பிரபு ஆகியோா் கொண்ட குழுவினா் அந்த கி’ட்டங்கியை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உற்பத்தி பொருள்களான இயற்கை உயிா் ஊக்கிகளுக்கு உற்பத்தி செய்வதற்கான அனுமதி இருப்பது தெரிய வந்தது.

ஆனால் இந்த பொருள்களை இங்கு வைப்பதற்கான கிட்டங்கிக்கு அனுமதி ஆணை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அந்த பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியை வேளாண்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

மேலும் இப் பொருள்கள்களை கிட்டங்கியில் வைப்பதற்கான உரிய அனுமதியை பெற்ற பின்பு தான் பொருள்களை வைக்க வேண்டும் என்றும், உரிய ஆணையை பெற அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com