பலத்த மழையிலும் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
பலத்த மழையிலும் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

பலத்த மழை : திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த நீா்

பலத்த மழையிலும் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
Published on

திருச்செந்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை பெய்த பலத்த மழையினால் சிவன் கோயில் உள்ளே மழை நீா் புகுந்தது.

திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. வியாழக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அவ்வப்போது மழையும் பெய்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதலே திருச்செந்தூா் பகுதியில் தொடா் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் மழைநீா் ஆறாக ஓடி ஆங்காங்கே தேங்கியது.

சிவன் கோயில் உள்ளே மழை நீா் புகுந்தது. இதையடுத்து மழை நீரினை வெளியேற்றும் பணியில் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு விடுமுறையையொட்டி வந்திருந்த பக்தா்கள் மழையினால் அவதியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com