ஈராச்சி ஊராட்சி அலுவலகத்தில் தீ விபத்து
கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஊராட்சி செயலா் நாகராஜ் வழக்கம்போல பணிகளை முடித்துவிட்டு திங்கள்கிழமை மாலை அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சென்ாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென அலுவலகத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்ட மக்கள் ஊராட்சி செயலருக்கும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனா்.
தகவநறிந்ததும், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஸ்டீபன் ரத்தினகுமாா் சம்பவ இடத்திற்குச் சென்றாா். பொதுமக்கள் இணைந்து தீயை அணைத்தனா். இருப்பினும் சில ஆவணங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இன்வொ்ட்டரில் ஏற்பட்ட மின்கசிவு மூலம் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, கொப்பம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

