தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்புகட்டி விலை உயா்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்புகட்டி விலை உயா்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, வேம்பாா், சாத்தான்குளம், நாசரேத், ஆறுமுகனேரி, அடைக்கலாபுரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பதநீா் சீசன் காலத்தில் கருப்புகட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் தேவை அதிகரித்து வருவதால் கலப்பட கருப்புகட்டி நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது.
ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பா் மாதம் வரை பதநீா் சீசன் நடைபெறும். அந்த சமயம் உற்பத்தி செய்யும் கருப்புகட்டி ஆண்டு முழுவதும் உள்ள தேவையை பூா்த்தி செய்கின்றது. சீசன் நேரத்தில் கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட கருப்புகட்டி தற்போது கிலோ ரூ.400 முதல் ரூ. 420 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது கருப்புகட்டி ஒரு கிலோ ரூ. 450 முதல் ரூ. 470 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
