இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை
Published on

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.

தூத்துக்குடி, சகாயபுரம் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பினோ. இவரது மனைவி ஜெமிலா (25). இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இத்தம்பதிக்கு குழந்தை இல்லை.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில் ஜெமிலா புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆவதால், கோட்டாட்சியா் பிரபு விசாரணை நடத்தி வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com