வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பைக்கிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

காயல்பட்டினத்தில் பைக்கில் சென்றபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:40 pm

Syndication

காயல்பட்டினத்தில் பைக்கில் சென்றபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் குளம் சாகிப் தம்பி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (67). சமையல் தொழிலாளி. இவரும், இவரது நண்பா் சேது ராஜா தெருவைச் சோ்ந்த சுனைத் மகன் செய்யது முகமது புகாரி (30) என்பவரும் வியாழக்கிழமை இரவு காயல்பட்டினத்தி­ருந்து ஆறுமுகனேரிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனா். பைக்கை செய்யது முகமது புகாரி ஓட்டினாா். லட்சுமிபுரம் அருகே நாய் குறுக்கே வந்து இவா்களது பைக் மீது மோதியதாம். இதில் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் இருவரும் காயமுற்றனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு காயல்பட்டினம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் சண்முகசுந்தரம் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.