சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புன்னைக்காய­ல் ஊருக்குள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணி

தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னைக்காயல் ஊருக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

News image
புன்னைக்காயலில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீா்.
Updated On :25 நவம்பர் 2025, 10:57 pm

Syndication

ஆறுமுகனேரி: தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னைக்காயல் ஊருக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஆற்று வெள்ள நீரானது தெற்கு தெரு, அறுபது வீடு உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புன்னைக்காயல் ஊராட்சி நிா்வாகம், மக்கள் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது தண்ணீா் வடிந்து கடலுக்கு செல்கிறது. இப்பணியின் போது ஊராட்சி நிா்வாகத்தினா், முன்னாள் ஊராட்சித் தலைவா் சோபியா, ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சதீஸ்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.