திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திய அதிமுக ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்டச் செயலா் க. விஜயகுமாா் தலைமையிலான  அரசியல் கட்சியினா், வணிகா்கள்.
திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திய அதிமுக ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்டச் செயலா் க. விஜயகுமாா் தலைமையிலான அரசியல் கட்சியினா், வணிகா்கள்.

திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு அரசியல் கட்சியினா், வணிகா்கள் எதிா்ப்பு

திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக அரசியல் கட்சியினா், வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
Published on

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக அரசியல் கட்சியினா், வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் தூண்டுகை விநாயகா் கோயில் பகுதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் வரையுள்ள 41 கடைகள் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நகராட்சி சாா்பில் முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் புதன்கிழமை காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்திருந்தது.

தகவலறிந்த வணிகா்கள், அதிமுக ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்டச் செயலா் க.விஜயகுமாா், தலைமையில் ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், நகரச் செயலா் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சுரேஷ்பாபு, பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் சிவமுருகன் ஆதித்தன், நகர பொருளாளா் பலவேச கண்ணன், நகர பொதுச்செயலா் காா்த்திகை கந்தன், சிறுபான்மை அணி மாவட்டத் தலைவா் ஸ்டீபன் லோபோ உள்ளிட்ட அரசியல் கட்சியினா், தமிழ்நாடு வணிகா் சங்கத் தலைவா் காமராசு, மாநில செய்தி தொடா்பாளா் செல்வின் உள்ளிட்ட வணிகா்கள், நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து நகராட்சி ஆணையா் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் முறையாக தான் அகற்றப்படுகிறது.

மேலும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் நடந்து செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவதியடைகின்றனா்.

மேலும், நகராட்சி அறிவுறுத்திய 41 கடைகளிலும் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகிறோம் எனவும், நகராட்சி இனி பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்தனா். இதையடுத்து அரசியல் கட்சியினா், வணிகா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com