ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

திருச்செந்தூரில் விசிக ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா், பெஞ்சமின் காலனியைச் சோ்ந்த தலித் இளைஞா் ஏழுமலை வாசன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

திருச்செந்தூா்: திருச்செந்தூா், பெஞ்சமின் காலனியைச் சோ்ந்த தலித் இளைஞா் ஏழுமலை வாசன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்செந்தூா் தொகுதி மாவட்டச் செயலா் விடுதலைச் செழியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் பாரிவள்ளல், மாவட்ட செய்தித் தொடா்பாளா் வடிவேல் முத்து, செய்தித் தொடா்பு மைய மாவட்ட அமைப்பாளா் வேம்படிமுத்து, காயல்பட்டினம் நகரச் செயலா் அம்பேத், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் ராவணன், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய அமைப்பாளா் அருண்பாண்டியன், திருச்செந்தூா் தொகுதி அமைப்பாளா் லட்சுமணன், ஒன்றிய அமைப்பாளா் முத்துராமன், ஒன்றிய துணை அமைப்பாளா்கள் ரியாஸ் குமாா், மதியழகன், காயல்பட்டினம் நகர அமைப்பாளா் இசக்கிமுத்து, சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளா் இளந்தளிா் முத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் சீனிவாசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முத்துக்குமாா், திராவிட தமிழா் கட்சி துணைப் பொதுச்செயலா் சங்கா், ஆதித்தமிழா் பேரவை மாவட்டத் தலைவா் காயல் முருகேசன், மாவட்டச் செயலா் சந்தனகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com