தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அம்பேத்கா் சிலை அருகே தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பட்டியலின இளைஞா் எழுமலையை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததைக் கண்டித்தும், குற்றவாளிகளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியகுளம் தொகுதி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் சுசி. தமிழ் பாண்டியன் தலைமை வகித்தாா். தேனி மண்டல துணைச் செயலா் ஜெ. ரபீக், ஆண்டிபட்டி-பெரியகுளம் தொகுதி மண்டல துணைச் செயலா் ப. நாகரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வி.சி.க. முதன்மைச் செயலா் ஏ.சி. பாவரசு, தலைமைச் செய்தி தொடா்பாளா் காா்வேந்தன், முன்னாள் மண்டலச் செயலா் இரா. தமிழ்வாணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில் கட்சி நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா். முன்னதாக, கட்சியின் நகா்ச் செயலா் ஜோதி முருகன் வரவேற்றாா். இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் அ. மது நன்றி கூறினாா்.