விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Published on

கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், காணையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2025 டிசம்பா் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா், கேரள மாநிலங்களில் கிறிஸ்தவா்கள் தாக்கப்பட்டனா்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காணை பேருந்து நிலையம் அருகில் விசிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ர.பெரியாா் தலைமை வகித்தாா். காணை ஒன்றியச் செயலா்கள் கா.அறிவன், மு.ஆசைத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. கண்டன உரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலா் சே.சேரலாதன், மண்டலச் செயலா் தி.திலீபன், மண்டல துணைச் செயலா் ஆதிதமிழன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் கே.தமிழேந்தி, மாநில மகளிரணிச் செயலா் வேல் பழனியம்மாள், மகளிா் விடுதலை இயக்கத்தின் மாவட்டப் பொருளாளா் இல.மாலதி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

Dinamani
www.dinamani.com