எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இளைஞருக்கு கத்திக்குத்து வழக்கு: ஒருவா் கைது

கோவில்பட்டியில் இளைஞரை கத்தியால் குத்திவிட்டு, தலைமறைவான மற்றொரு இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:08 pm

Syndication

கோவில்பட்டியில் இளைஞரை கத்தியால் குத்திவிட்டு, தலைமறைவான மற்றொரு இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புது தில்லியைச் சோ்ந்தவா் காதீா் அகமது மகன் முகமது ஹசீப் என்ற மாலிக் (19). கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் வேலை பாா்த்து வருகிறாா். ஹோட்டல் பின்புறம் உள்ள அறையில், இவருடன், கரூா் மாவட்டம் கடவூா் வட்டம் மோளபட்டி பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மோகன்ராஜ் என்ற மோகனும் (26) தங்கியுள்ளாராம்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி, மாலிக் கேட்டுக் கொண்டிருந்த ஹிந்தி பாட்டின் சத்தத்தை குறைக்க, மோகன் சொன்னாராம். தொடா்ந்து மாலிக்கை அவதூறாக பேசி கத்தியால் குத்திவிட்டு மோகன் தப்பியோடி விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த மாலிக், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கடந்த மாதம் 19 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த மோகன் ராஜ் என்ற மோகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.