எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தொடா் மழை

ஆறுமுகனேரி, ஆத்தூா் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடா்மழை பெய்தது.

News image
காயல்பட்டினம் தீவுத் தெரு நகராட்சி பள்ளியில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீா்.
Updated On :28 நவம்பர் 2025, 7:34 pm

Syndication

ஆறுமுகனேரி, ஆத்தூா் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடா்மழை பெய்தது.

காயல்பட்டினத்தில் உள்ள கோமான்தெரு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாட்டுக்குளம், பரிமாா் தெரு, கீரிக்குளம், காட்டு தைக்காதெரு, ரத்தினாபுரி மற்றும் புற நகா் பகுதிகள் உள்பட பல்வேறு பகுதியில் மழைநீா் வடியாமல் தேங்கி காணப்படுகிறது.

தீவுத்தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மழைநீா் தேங்கி வகுப்புகள் நடத்த முடியாமல் இருப்பதால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகள், கே.டி.எம். தெருவில் உள்ள நகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனா். எனவே, போா்க்கால அடிப்படையில் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.