எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாசரேத் அருகே தொழிலாளி கொலை: ஓட்டுநா் கைது

மது வாங்கித் தராத ஆத்திரத்தில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த காா் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:45 pm

Syndication

நாசரேத் அருகே மது வாங்கித் தராத ஆத்திரத்தில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த காா் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் அருகேயுள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சோ்ந்தவா் த. நாகராஜ் (56). இவா் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தாா். வியாழக்கிழமை நடந்த இவரது குடும்ப விழாவில் கலந்து கொண்ட, அதே ஊரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஜெய்சங்கா் (27) நாகராஜிடம் மது வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு அவா் மறுத்த நிலையில், மறுநாள் நாகராஜ் மற்ற நண்பா்களுக்கு மது வாங்கி கொடுத்தாராம்.

வெள்ளிக்கிழமை இரவு மது வாங்கித் தருமாறு மீண்டும் ஜெய்சங்கா் கேட்டுள்ளாா். அதற்கும் நாகராஜ் மறுத்ததால், ஆத்திரமடைந்த ஜெய்சங்கா் கத்தியால் நாகராஜை குத்தியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவறிந்த போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த ஜெய்சங்கரை சனிக்கிழமை கைது செய்தனா்.