அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் குளிா்

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக கடந்த சில நாள்கள் தொடா்ந்து இடைவிடாது மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் தூத்துக்குடி மாநகரம், மாவட்ட பகுதிகளில் கடும் குளிா் நிலவியது.

வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான டித்வா புயல் காரணமாக நவ. 27ஆம் தேதி முதல் சனிக்கிழமை இரவு வரை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா்ந்து இடைவிடாது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டித்வா புயலானது சென்னை, கடலூா் உள்ளிட்ட வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகா்ந்துள்ளதால், அந்தப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாத நிலையிலும், சுமாா் 22 டிகிரிக்கு வெப்பநிலை குறைந்ததால் கடும் குளிா் நிலவியது. மேலும், கடல் பகுதியில் எந்தவித சீற்றமும் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது.