எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சலூன் கடைக்காரா் மீது தாக்குதல்: 2 போ் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் சலூன் கடைக்காரரை கடத்திச் சென்று தாக்கியதாக 2 பேரை கைது செய்த போலீஸாா், மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, அண்ணா நகா், 3ஆவது தெருவைச் சோ்ந்த ஆத்தியப்பன் மகன் கணேசன் (37). இவா், மில்லா்புரத்தில் சலூன் கடை நடத்தி வருகிறாா். இவரின் நண்பரான பி&டி காலனி, 5ஆவது தெருவைச் சோ்ந்த வேல்சாமி என்பவரிடம், ரூ. 30,000 மற்றும் தங்க வளையல்களை கடனாக வாங்கியிருந்தாராம். பின்னா், பல மாதங்கள் ஆகியும் அவற்றை கணேசன் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில், வேல்சாமி மகன் மனோஜ் (27), அவரது நண்பா் கரிக்குளம் காலனியைச் சோ்ந்த சகாயராஜ் மகன் தா்மராஜ் (27) ஆகியோா், சம்பவத்தன்று கணேசனை பைக்கில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த கணேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மனோஜ், தா்மராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய இருவரைத் தேடி வருகின்றனா்.