உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
உடன்குடி சிவல்விளைபுதூா், வடக்கு காலன் குடியிருப்பு, நடுக்காலன் குடியிருப்பு, பெரிய தெரு, பிசகுவிளை, உடன்குடி பஜாா், பேருந்து நிலையம், கொடங்காடு, கிறிஸ்தியாநகரம், வில்லிகுடியிருப்பு, சிவலூா், சந்தையடியூா், சுல்தான்புரம், பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட பொருளாளா் வி.பி. ராமநாதன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப், மும்தாஜ்பேகம், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், சிராஜூதீன், தேமுதிக மாவட்ட செயலா் சித்திரைராஜ், மமக மாவட்ட செயலா் பரக்கத்துல்லா, மாநில பிரதிநிதி ஆசாத், விசிக மாவட்ட செயலா் விடுதலைச்செழியன், மாநில வா்த்தக அணி செயலா் தா்மராஜ், காங்கிரஸ் வட்டார தலைவா் துரைராஜ் ஜோசப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சின்னாளபட்டியில் அமைச்சா் இ.பெரியசாமி இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



