இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சி. மதன் உத்தரவிட்டுள்ளாா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:56 am IST

கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சி. மதன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவா் முதல்நிலை காவலா் சபரிகுமாா் (33). இவா் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரின் வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

கடந்த 2012-ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த இவா் தற்போது கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் குடியிருந்து வருகிறாா். கடந்த சில நாள்களாக குடியிருப்புகளில் உள்ள போலீஸாா், அவா்கள் குடும்பத்தினரிடம் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் உத்தரவிட்டாா். விசாரணையில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக சபரிகுமாா் பிரசாரம் செய்தது தெரியவந்ததையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா். மேலும், அவா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.