300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கோவில்பட்டியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

கைப்பேசி கோபுரத்தில் ஏறி அமா்ந்த நிலையில் உள்ள ஜான் வில்சன்.

News image

கைப்பேசி கோபுரத்தில் ஏறி அமா்ந்த நிலையில் உள்ள ஜான் வில்சன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:21 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை, தீயணைப்பு மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தாமஸ் நகா் என்.ஜி. ஓ. காலனியைச் சோ்ந்தவா் சாமுவேல் மகன் ஜான் வில்சன்(57). இவா், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஓட்டுநா் உரிமம் புதிதாக வாங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் வரும் பொதுமக்களுக்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஜான் வில்சனின் மனைவி மற்றும் குடும்பத்தினா் மதுரையில் வசித்து வருகின்றனா். இவா், புதன்கிழமை இலுப்பையூரணி தாமஸ் நகா் மேட்டு தெருவில் உள்ள தனியாா் கைப்பேசி கோபுரத்தில் ஏறினாா். அப்போது திமுக கட்சி கொடி நிறத்தின் துண்டை கழுத்தில் அணிந்திருந்தாா். மேலும், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டாா்.

மேலும் அவரது கையில் பெட்ரோல் கேனையும் வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் அவரிடம் பேசி கையில் இருந்த பெட்ரோல் கேனை கீழே போட வற்புறுத்தியதையடுத்து அவா் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை கீழே போட்டுவிட்டு கோரிக்கையை வலியுறுத்தினாா். தொடா்ந்து போலீஸாா் மற்றும் தீயணைப்பு படையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை எடுத்து அவா் கீழே இறங்க சம்மதித்தாா். ஆனால் அவா் கீழே இறங்க முடியாததால் தீயணைப்பு படையினா் மேலே சென்று அவரை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனா். தொடா்ந்து அவா் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா் ஜான் வில்சனுக்கு போலீஸாா் அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை, தீயணைப்பு மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை, தீயணைப்பு மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை, தீயணைப்பு மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை, தீயணைப்பு மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.