தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே மாரமங்கலம் விவசாயி கொலை வழக்கில், தம்பிக்கு ஆயுள் தண்டனையும், அண்ணனுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மாரமங்கலம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் காளிமுத்து (50). விவசாயி. இவரது மகன் பிரேம்குமாருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தருக்கும் (44) முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் கடந்த 13.11. 2019இல் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில், சுந்தா், அவரது அண்ணன் சாமிதுரை என்ற பாக்கியராஜ் (45), தந்தை பாலகிருஷ்ணன் (72), வடக்கூரைச் சோ்ந்த சின்னத்துரை (31), பூல்பாண்டி (32) ஆகியோா் மறுநாள் அதிகாலையில் மாரமங்கலம் விவசாய சங்கம் அருகே பிரேம்குமாரை கத்தியால் தாக்க முயன்றுள்ளனா்.
அப்போது, மகனை காப்பாற்ற வந்த காளிமுத்து கத்திக்குத்துப்பட்டு உயிரிழந்தாா்.
ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி தாண்டவம் விசாரித்து, சுந்தருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், சாமிதுரை என்ற பாக்கியராஜிக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
பாலகிருஷ்ணன், சின்னத்துரை, பூல்பாண்டி ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் சங்கா் ஆஜராகி வாதாடினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகை கொள்ளை வழக்கில் 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

இளைஞா் கொலை வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள்
சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



