ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

கயத்தாறு அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த அம்மாள்பட்டி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சின்னதுரை (45). விவசாயியான இவா், திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் கயத்தாறுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினாராம். அப்போது, கயத்தாறு -அம்மாள்பட்டி சாலையில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததாம்.

இதில் காயமடைந்த சின்னதுரையை மீட்டு கயத்தாறு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினா்.

இதையடுத்து சடலத்தை, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.