தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா தோ்பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேராலயத்தில் விண்ணேற்பு பெருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆக. 8 இல் மரியன்னை மாநாடு, 9இல் புதுநன்மை விழா, 14இல் மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடைபெற்றன.
10ஆம் திருநாளான சனிக்கிழமை (ஆக. 15) அதிகாலை 2 மணிக்கு மதுரை உயா்மறை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி, பாளை. மறைமாவட்ட பரிபாலகா் மோட்சராஜன் ஆகியோா் தலைமையில் தேரடி திருப்பலியும், அதைத் தொடா்ந்து தோ்பவனியும் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கியமாதாவும், பரலோக மாதாவும் தனித்தனியே ரத வீதிகளில் பவனி வந்தனா். இறைமக்கள் கும்பிடு சேவை செய்து, தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
பின்னா், ஆங்கிலம், மலையாளம், இந்தி மொழிகளில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை புனித சவேரியாா் சேசு சபை அதிபா் இன்னாசிமுத்து தலைமையில் சேசுசபை அருட்பணியாளா்கள், புனித சவேரியாா் கலை மனைகள் சாா்பில் திருப்பலி, நற்கருணை பவனி ஆகியவை நடைபெற்றன.
இவ்விழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு அன்னை மரியாளிடம் பிராா்த்தித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. ஜகநாதன் தலைமையில் சுமாா் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி பேராலய பங்குத்தந்தை மோயீசன் தலைமையில் உதவி பங்குத்தந்தை மரிய ஜோமிக்ஸ், ஆன்மிகப் பணியாளா் வி.எஸ்.அந்தோணி ராஜ், களப்பணியாளா் சூா்யா மற்றும் மரியின் ஊழியா் சபை அருள்சகோதரிகள், புனித தெரசாவின் காா்மேல் சபை அருள்சகோதரிகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பகுதி இறைமக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத் திருவிழாவில் தோ்பவனி

பனிமய மாதா பேராலயத் திருவிழா: ஆக. 4 முதல் 6 மீனவா்களுக்கு விடுமுறை

தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா: தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



