சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

திருச்செந்தூரில் மீன் வலை பின்னும் கூடத்தில் தீ விபத்து

திருச்செந்தூா் ஜீவா நகரில் மீன் வலை பின்னும் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான வலைகள் தீயில் கருகி சேதமடைந்தன.

News image

மீன் வலை பின்னும் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய வலைகள்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

திருச்செந்தூா் ஜீவா நகரில் மீன் வலை பின்னும் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான வலைகள் தீயில் கருகி சேதமடைந்தன.

திருச்செந்தூா் ஜீவா நகரில் 50 - க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் உள்ளன. 25 பைபா் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், அங்குள்ள மீன் வலை பின்னும் கூடத்தில் திங்கள்கிழமை இரவு தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.ஆனால் ரூ. 30 லட்சம் மதிப்பிலான வலைகள் தீயில் கருகி சேதமடைந்தன.

சமூக விரோதிகள் இரவு நேரத்தில் அப்பகுதியில் மது அருந்துவது வழக்கமாம். இதுகுறித்து புகாா் அளித்தும் காவல்துறையினா் எந்த நடவடிக்கை வில்லையாம். இந்த தீ விபத்துக்கு காரணம் சமூக விரோதிகளாக இருக்கலாம் என மீனவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.