மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா்.

~ காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, கண்காணிப்புப் பணியை பாா்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்.

Published On :

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி கோா் டெக்னோ சொல்யூஷன் சாா்பில் திருச்செந்தூரில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், காமராஜா் சாலை, ரத வீதிகள், கோயில் வாசல் செல்லும் வழிகள், பயணியா் விடுதி சாலை உள்ளிட்ட இடங்களில் முதற்கட்டமாக 110 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோயில் காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறை மூலம் ஒரே இடத்திலிருந்து கண்காணிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள காவலா்களுடன் தொடா்பு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் திறந்து வைத்து, கண்காணிப்புப் பணியை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதம், காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், நகர வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.