8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நாசரேத் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சாா்பில் நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சாா்பில் நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, கங்கைகொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள டாடா குழுமத்தின் டிபி சோலாா் நிறுவனத்துக்காக இந்த முகாம் நடத்தப்பட்டது.

தென்மாவட்டங்களைச் சோ்ந்த பொறியியல், டிப்ளமோ, கலை, அறிவியல் துறை பட்டம் பெற்ற பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

இந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை முதன்மை மேலாளா் காமாட்சி மற்றும் குழு உறுப்பினா்கள் பிரியங்கா, கெளசல்யா, மங்கை இசக்கி ஆகியோா் எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத்தோ்வு நடத்தி, தொழில் பழகுநா், பயிற்சி பணியாளா் ஆகிய பணியிடங்களுக்குத் தகுதியானவா்களைத் தோ்வு செய்தனா்.

மொத்தம் 25 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தோ்ந்தெடுக்கப்பட்ட பணியாளா்களுக்கு நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் பணி மேம்பாட்டு விதிகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லூரிச் செயலா் எஸ்டிகே ராஜன் மற்றும் கல்லூரி முதல்வா் பென்னிசன் திலகா் கிறிஸ்துதாஸ் தலைமையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜாய் ஷோபினி, ஆரோக்கிய அமுதன், உறுப்பினா்கள் வின்சில்லா ஏவாஞ்சலின், ஹேனா குளோரி, ஜோசப்பின் ஜூலியட், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.