காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கோவில்பட்டியில் இளைஞருக்கு மிரட்டல்: 2 சிறாா்கள் உள்பட 5 போ் கைது

கைது

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் போஸ் குமாா் (26). இவருக்கும், இந்திரா நகா், நாக கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் ஹரிஹரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்திரா நகா், வெற்றி விநாயகா் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போஸ் குமாரை மறித்து, ஹரிஹரன் உள்ளிட்ட 5 போ் அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த போஸ் குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்திரா நகா், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை முத்து மகன் கருப்பசாமி (எ) காா்த்திக் (19), ஹரிஹரன் (19), வடக்கு தெருவைச் சோ்ந்த செண்பகம் மகன் கருப்பசாமி (41), 17 வயது சிறாா்கள் 2 போ் ஆகிய 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.