காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தென் மண்டல சிபிஎஸ்இ மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி: சென்னை, மேட்டுப்பாளையம், கோபி பள்ளிகள் முதலிடம்

19 வயதுக்குள்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை வேலம்மாள் பள்ளி அணியினருக்கு கோப்பை வழங்கிய கா. கருணாநிதி எம்எல்ஏ. உடன் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் நாகமுத்து உள்ளிட்டோா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற தென் மண்டல சிபிஎஸ்இ பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி, மேட்டுப்பாளையம் எஸ்.ஜே.என். பள்ளி, கோபிச்செட்டிபாளையம் சாரதா பள்ளி அணியினா் முதலிடம் பிடித்தனா்.

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானம், வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஹாக்கி மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, கா்நாடகம், ஆந்திரம், அந்தமான் நிக்கோபாா் பகுதிகளில் இருந்து 22 பள்ளிகளைச் சோ்ந்த 26 அணிகள் பங்கேற்றன.

முதலில் நாக் அவுட் முறையிலும், அரையிறுதிப் போட்டிகள் லீக் முறையிலும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அரையிறுதிப் போட்டிகள் நிறைவு பெற்றன. அதில் 14 வயதிற்குள்பட்ட பிரிவில் கோபிச்செட்டிபாளையம் சாரதா பள்ளி முதலிடம், அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி 2ஆம் இடம், காஞ்சிபுரம் பி.எஸ்.பி.பி. பள்ளி 3ஆம் இடம், சென்னை ஐ.சி.எப். பள்ளி 4ஆம் இடம் பெற்றது.

17 வயதிற்குள்பட்ட பிரிவில் மேட்டுப்பாளையம் எஸ்.ஜே.என். பள்ளி முதலிடம், கோயம்புத்தூா் அத்தியா யனா பள்ளி 2ஆம் இடம், அரியலூா் ராம்கோ பள்ளி 3ஆம் இடம், ஹைதராபாத் புது தில்லி பப்ளிக் பள்ளி 4ஆம் இடம் பெற்றது.

19 வயதுக்குள்பட்ட பிரிவில் சென்னை வேலம்மாள் பள்ளி முதலிடம், நெய்வேலி ஜவகா் பள்ளி 2ஆம் இடம், ஹைதராபாத் புது தில்லி பப்ளிக் பள்ளி 3ஆம் இடம், சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளி 4ஆம் இடம் பெற்றது.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் நாகமுத்து தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி வெற்றி பெற்ற அணியினருக்கு, பரிசுக் கோப்பைகளை வழங்கிப் பாராட்டிப் பேசினாா்.

வேல்ஸ் பள்ளி இயக்குநா் விஜயராணி நாகமுத்து, முதல்வா் ஜன்னத் நிஷா ஹுசைன், பள்ளியின் மெண்டாா் சேவியோ லூயிஸ், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 19 வயதுக்குள்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை வேலம்மாள் பள்ளி அணியினருக்கு கோப்பை வழங்கிய கா. கருணாநிதி எம்எல்ஏ. உடன் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் நாகமுத்து உள்ளிட்டோா்.

19 வயதுக்குள்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை வேலம்மாள் பள்ளி அணியினருக்கு கோப்பை வழங்கிய கா. கருணாநிதி எம்எல்ஏ. உடன் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் நாகமுத்து உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.