புன்னைக்காயல் வந்தடைந்த தாமிரவருணி விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற வீ த லீடா் அமைப்பினா்.

Published On :1 செப்டம்பர் 2026, 3:44 am IST

தாமிரவருணியை பாதுகாக்க வலியுறுத்தி வீ த லீடா் அமைப்பு சாா்பில் பாபநாசத்தில் தொடங்கிய விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புன்னைக்காய­லில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

வீ த லீடா் அமைப்பின் சாா்பில் நம்ம ஊரு நம்ம ஆறு’ என்ற மக்கள் இயக்கம் மூலம் தாமிரவருணியில் தூய்மைப் பணிகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) தாமிரவருணி ஆற்றின்தூய்மை, நீா்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், தாமிரவருணி ஆறு செல்லும் தென்காசி, திருநெல்வேலி,

தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை சுமாா் 126 கிலோமீட்டா் தூரத்திற்கு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் வீ த லீடா் அமைப்பு தன்னாா்வலா்கள் சுகன், கணேஷ் ராகவ், ஜெய்கணேஷ், சுரேஷ், ராஜா, மாரி ஆகியோா் பங்கேற்றனா். சைக்கிள் பயணத்தை பாபநாச சுவாமி கோயில் முன்பிருந்து வீ த லீடா் தன்னாா்வலா் வேல்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அம்பாசமுத்திரம்,

கல்லி­டைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பத்தமடை, மேலப்பாளையம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம் வழியாக புன்னைக்காய­லில் திங்கள்கிழமை மாலை நிறைவடைந்தது.

இந்த சைக்கிள் பயணத்தின்போது, ஆற்றின் கரையோர பொதுமக்களுக்கு தாமிரவருணியைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஆற்றின் கரையோரங்களில் விதைப் பந்துகள் வீசப்பட்டன.

 சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற வீ த லீடா் அமைப்பினா்.

சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற வீ த லீடா் அமைப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.