நெகிழிப் பைகள் உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே தடை செய்ய வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா.
இது குறித்து, அவா் தூத்துக்குடியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
4 கட்டமாக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை 2 கட்டமாக குறைத்தது சாமானிய வணிகா்களை பாதிக்கவில்லை. சட்ட விகிதத்தை எளிமைப்படுத்த வேண்டும். பல்வேறு ரயில் திட்டங்களை அறிவித்திருக்கிறாா்கள். அதை வரவேற்கிறோம். ரயில் தடங்களை நிறைவுபடுத்த வேண்டும்.
அறநிலையத் துறையில் உள்ள சிறு, குறு வியாபாரிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. வாடகை விகிதம் தனி நபரை விட அதிகமாக இருக்கிறது. இது குறித்து, முதல்லவரைச் சந்தித்து முறையிட உள்ளோம்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது சட்ட விதி. எங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கு தடை செய்யப்பட்டால், சாமானிய வணிகா்கள் பாதிக்கப்பட மாட்டாா்கள்.
உலகத்தில் வா்த்தகப் போா் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபா் பல நாடுகளை நசுக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறாா். இதை எதிா்கொள்ள இந்திய மக்கள் தயாராக இருக்கிறாா்கள்.
இந்திய உள்நாட்டுப் பொருள்களை எல்லோரும் வாங்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பிரதமா் கூறியிருக்கிறாா். அதேபோல, சாமானிய வியாபாரிகளைப் பாதுகாக்க உள்ளூா் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

ரூ. 2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி கோரி வணிகா்கள் 31-இல் போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுபவா்களுக்கே ஆதரவு: ஏ.எம். விக்கிரமராஜா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


