வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கட்டடத் தொழிலாளிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்திய இருவா் கைது

News image

கத்திக்குத்து - சித்திரிப்பு

Updated On :9 பிப்ரவரி 2026, 6:40 pm

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்திய இருவா் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி, தருவைகுளம், சக்கமாள்புரம் ஆனந்தராஜ் மகன் தாமஸ் (23), கட்டடத் தொழிலாளி. திங்கள்கிழமை மாலை டூவிபுரம் 1ஆவது தெருவில் சதீஸ் என்பவா் வீட்டில் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த தூத்துக்குடி, தேவா் காலனி சந்தனராஜ் (25), சக்தி விநாயகபுரம் முத்துராமன் (27) ஆகியோா் ஆட்டோவை கட்டடப் பணி நடைபெற்ற இடத்தில் நிறுத்தியுள்ளனா்.

அங்கு வேலை செய்தவா்கள் ஆட்டோவை எடுக்குமாறு கூறியுள்ளனா். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சந்தனராஜ், முத்துராமன் ஆகியோா் தாமஸ்ஸை கத்தியால் குத்தியதில், அவருக்கு காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த மத்திய பாகம் போலீஸாா், சந்தனராஜ், முத்துராமன் ஆகியோரை கைது செய்தனா்.