ஆறுமுகனேரியில் போதை ஒழிப்பு மினி மாராத்தான் போட்டி
நமோ இளைஞா் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சாா்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடை பெற்றது.
ஆறுமுகனேரியில் தொடங்கி காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம் வழியாக திருச்செந்தூா் வரை 10 கி.மீ. தூரம் நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியை திருச்செந்தூா் பாஜக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணனும் பெண்களுக்கான போட்டியை பாஜக மாநில விவசாய அணி செயலாளா் சிவமுருகன் ஆதித்தனும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.
பரிசளிப்பு விழாவில் ஆண்களுக்கான பிரிவில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த வீரா் லட்சுமணனுக்கு ரூ. 50 ஆயிரத்தை பாஜக திருச்செந்தூா் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கே.அா்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கினாா். 2-ஆம் இடம் பிடித்த வீரா் முஹம்மதுக்கு ரூ. 25 ஆயிரத்தை பாஜக மாநில விவசாய அணி செயலாளா் சிவமுருகன் அதித்தனும், 3-ஆவது இடம் பிடித்த வீரா் கவினுக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு செயலாளா் பூபதி பாண்டியனும் பரிசுகள் வழங்கினா்.
பெண்களுக்கான போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த வீராங்கனை பவித்ராவுக்கு ரூ. 10 ஆயிரத்தை பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளா் டேவிட் விக்னேஷும், 2-ஆவது இடம் பிடித்த வீராங்கனை ஆண்ட்ரியா லின்சிக்கு ரூ. 5 ஆயிரத்தை சண்முகம், சிவக்குமாா் ஆகியோரும், 3-ஆவது இடம் பிடித்த வீராங்கனை தீப்ஷிகாவுக்கு ரூ. 3 ஆயிரத்தை பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாவட்ட துணைத் தலைவா் கண்ணன் ஆகியோா் வழங்கினா்.
தொடா்ந்து வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கான வெற்றி பதக்கத்தை டிசி டபிள்யூ மூத்த செயல் உதவி தலைவா் (பணிகம்) ஜி.சீனிவாசன் வழங்கினாா். மாரத்தான் போட்டியை நிறைவு செய்தவா்களுக்கு ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பாஜக ஆறுமுகனேரி நகர தலைவா் தங்ககண்ணன், பொதுச் செயலாளா் செல்வகுமாா், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட நிா்வாகிகள், திருச்செந்தூா் ஒன்றிய தலைவா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நமோ இளைஞா் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் மாவட்ட தலைவா் ராஜகோபால் நன்றி கூறினாா்.

