சாயா்புரம் பேருந்து நிலையத்துக்கு டாக்டா் ஜி. யு. போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம். எல். ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.
தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் ரூ. 1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னா் கடந்த 5 ஆம் தேதி தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.
ஆனால் பேருந்து நிலையத்திற்கு சாயா்புரம் பேரூராட்சி பேருந்து நிலையம் என பெயா் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் வைக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சாயா்புரம் பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி .கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம் எல் ஏ நன்றி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட காணொலி: தெலங்கானா முதல்வா் ஆதரவு

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை

தூத்துக்குடிக்கு நாளை துணை முதல்வா் வருகை - ரூ.300 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறாா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


