Express
ரயில் (கோப்புப்படம்)ANI

பொங்கலை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடிக்கு ஜன. 12, 19 ஆகிய தேதிகளிலும், தூத்துக்குடி-சென்னை சென்ட்ரலுக்கு ஜன. 13, 20 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடிக்கு ஜன. 12, 19 ஆகிய தேதிகளிலும், தூத்துக்குடி-சென்னை சென்ட்ரலுக்கு ஜன. 13, 20 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, வண்டி எண் 06151, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய நிறுத்தங்களில் நின்று, மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

வண்டி எண் 06152, தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிறுத்தங்களில் நின்று, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஜன. 8) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com