மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் பி. கீதா ஜீவன். உடன், ஆட்சியா் க. இளம்பகவத்.
தூத்துக்குடி
தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 பேருக்கு மடிக்கணினி
தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விழாவுக்கு, ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். மாநில சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசும்போது, தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 11.19 சதவீதம் என மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. அதேபோல, உழைக்கும் மகளிா் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு. வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைவான மாநிலம் தமிழ்நாடு. மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவது, வேலைவாய்ப்புக்கு மிகவும் உதவும் என்றாா்.
திட்ட அலுவலா் நாகராஜன், கல்லூரிச் செயலா் குழந்தை தெரசா, கல்லூரி முதல்வா் ஜெஸி பா்ணான்டோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

