தூத்துக்குடி
தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை
தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தூத்துக்குடி மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.